இலங்கை சினிமா

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காலமானார் !

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காமானதா அவரது குடும்பத்வர்கள் தெரிவித்தனர்.

தர்சன் தர்மராஜ் தனது 41 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இன்று (2) அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஏராளமான சிங்கள தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சிங்கள, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தர்சன் தர்மராஜ்.

சிறந்த நடிகர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தர்சன் தர்மராஜின் மறைவுக்கு திரையுலகப் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை கலைத்துறை இன்று திறமையான  கலைஞரை இழந்திருக்கிறது. தர்சன் தர்மராஜிற்கு எமது அஞ்சலிகள்.

Related posts

NMRA தரவுகளை நீக்கிய மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

Rajith

பலம் பொருந்திய இங்கிலாந்துடனான முதல் டி-20 ஆட்டம் இன்று

Rajith

மூத்த ஊடகவியலாளர் ஸ்ரீ லால் கொடிகார காலமானார்

Rajith

Leave a Comment