இலங்கை யாழ்ப்பாணம்

யாழில் வீட்டுக்குள் நுழைந்து தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கி கொள்ளை!

வன்முறை கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தாய் மற்றும் மகனைக் கட்டிப்போட்டு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாயும் மகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவக்குழி மேற்கு – சித்தி விநாயகர் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புகுந்த திருடர்கள், வீட்டின் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் 17 வயது மகனின் கை முறிந்துள்ளதுடன் 42 வயதுடைய தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த தாயும் மகனும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம்

Rajith

இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பு

Rajith

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Rajith

Leave a Comment