இலங்கை

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழர் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பலவீனப்படுத்தியிருகின்ற அனுபவத்தினை மறந்துவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக் கொண்டே கட்சிகள் இணைந்திருக்கின்ற என்பது வெளிப்படையானது.

எனினும், கடந்த காலங்களில் தலைமைக்கான போட்டிகளும், அதனால் உருவாகிய முரண்பாடுகளுமே தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து போனமைக்கான பிரதான காரணமாக அமைந்திருந்ததுடன், கிடைத்த சந்தர்ப்பங்கள் பல கைநழுவிப் போவதற்கும் காரணமாக இருந்தது.

எனவே, தற்போது உருவாகியுள்ள சூழலையும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தரப்பினரும், காலத்தை வீணடிக்காது விட்டுக்கொடுப்புக்களின் மூலம் தமக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினைகளையும், தமக்கு இடையிலான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Suki

Recent Posts

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் முக்கிய நபர்கள் நேரில் சென்று அஞ்சலி.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

18 hours ago

முள்ளிவாய்கால் நினைவு தினத்தில் வவுனியாவில் போராட்டம்.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

18 hours ago

மின்சாரக் கட்டணம் குறைகிறதா ?

மின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதனைத் தொடர்ந்து,…

2 days ago

கணவன் பிரான்ஸ் – யாழ்ப்பாணத்தில் மனைவி சடலமாக மீட்ப்பு.

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். காளி கோவில்…

2 days ago

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(17) சற்று அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின்…

2 days ago

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்புறமாக உள்ள “வைத்தியசாலை வீதியில்” மரநடுகை.

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை, மற்றும் Green Layer சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றாக இணைந்து வைத்தியசாலை முன்புறமாக…

2 days ago