உலகம் பகலவன் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் கைதான மதபோதகருக்கு 8658 ஆண்டுகள் சிறை

துருக்கி நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைதான மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் நீதிமன்றம் 8658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

துருக்கியை சேர்ந்த 66 வயதான அட்னான் அக்தார் மதபோதகராக கருதப்பட்டார். ஏ9 என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்ற அவர் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழஙகினார்.

இந்நிலையில், அவருக்கு கடந்த ஆண்டு, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மோசடி மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களில், தற்போது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

அந்த நீதிமன்றம் மேலும் 10 குற்றவாளிகளுக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிதாக 1.8 கோடி பேருக்கு கொரோனா!

Rajith

தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக மாறியது

Rajith

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் மேலதிக விசாரணைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Rajith

Leave a Comment