உலகம்

இந்தோனேசியாவின் பாலி அருகே 271 பேருடன் சென்ற படகில் தீ பரவல்

லிம்பா் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி சென்ற குறித்த படகில் 236 பயணிகளும், 35 பணியாளா்களும் இருந்தனா். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமாா் 1.5 கி.மீ. தூரத்தில் இருந்தபோது அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அதிலிருந்த பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

மீட்புப் படையினரும், மீனவா்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு வடக்கு சுமத்திரா மாகாணத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 167 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து ஜேர்மனிக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளவரசர் ஜோர்ஜ்

Suki

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

admin

கொலராடோ மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ: பலர் இடம்பெயர்வு

Suki

Leave a Comment