இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் .இந்துக்கல்லுாரி பளுதுாக்கும் வீரன் செம்மணிக் குளத்தில் நீராடும் போது பலி!!

யாழ் இந்துவின் பளுதூக்கும் அணி 3 தடவை தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற அணியினை தலைமை தாங்கிய 2018 உயர்தர பிரிவினை சேர்ந்த உ.சுஜந்தன் அவர்கள் குளத்தில் நீராடும் போது அகாலமரணமானார்.

இவரது வீடு செம்மணி வீதியில் அமைந்துள்ளது.

செம்மணியில் உள்ள குளத்தில் மீன் பிடித்ததன் பின்னர் குளத்தில் நீராடும் போது சுழியில் அமிழ்ந்து உயிரிழந்துருப்பது மிக வேதனையளிக்கின்றது.

உயிரியல் பிரிவில் பயின்றிருந்தார். தற்போது தேசிய ரீதியில் சாதிக்கும் யாழ் இந்து பளுதூக்கும் அணியின் பயிற்றுவிப்பாளர்.மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்ப பின்னணியில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவில் இணைந்திருந்தார்.

தற்போது யாழ் இந்துவில் பயிற்சியளிக்கும் நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் குடும்ப வறுமை காரணாமக மேசன் வேலைக்கும் சென்றுவந்தார்.

Related posts

பகவத்கீதை நூல் நாமல் ராஜபக்ஷவினால் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வெளியீடு

Rajith

மேலும் 583 பேர் கொவிட் தொற்று

Rajith

ஒரு இலட்சத்திற்கும் அதிக வருமானம் பெறுவோரிடமிருந்து 5 வீத வரி அறவிடப்படுமா?

Rajith

Leave a Comment