உலகம்

5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சகலின் தீவில் உள்ள டிமோவ்ஸ்கோய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிடம் 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் சிக்கியுள்ளதாகவும், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹொங் கொங்கில் 16வது வாரமாகவும் தொடர் போராட்டம்!

admin

பிகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு..

Rajith

உய்குர் வன்முறை எதிரொலி – சீன அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்கிறது அமெரிக்கா!

admin

Leave a Comment