இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட தாய் மகன் அயலவர் என மூவர் கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரேலு மேற்கு பொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட புலனாய்வு திணைக்களத்திற்கு (20-11-2022) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு அருகில் வசிக்கும் தாய், மகன் மற்றும் அயலவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து 15 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

admin

காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

Rajith

எரிபொருள் விநியோகம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஆலோசனை

Rajith

Leave a Comment