இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்துடன் மாவீர்களுக்கு அக வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றிலிருந்து எதிர்வரும் 27 ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

Related posts

யாழில் குடிபோதையில் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி கைது!

Suki

கைது செய்யப்பட்ட நபரின் வங்கி கணக்கில் பாரிய அளவான பணம்

admin

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு!

Suki

Leave a Comment