இந்தியா இலங்கை சினிமா

நடிகர் அஜித்தை வென்ற லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் – அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

அண்மையில் வெளிவந்த மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் திரைப்படம் லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் ரூ. 80 கோடியை கடந்து வசூல் செய்துகொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

தமிழில் கிடைத்த ஆதரவிற்கு இணையாக தெலுங்கிலும் லவ் டுடே படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிக வசூல்

கடந்த மூன்று நாட்களில் தெலுங்கில் மட்டுமே ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் லவ் டுடே திரைப்படம்.

இதன்முலம் தெலுங்கில் ரூ. 6 கோடி வசூல் செய்த அஜித்தின் வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது லவ் டுடே.

மேலும், விரைவில் ரூ. 7.5 கோடி வசூல் செய்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூலை கடந்துவிடும் என்றும் தெரிகிறது. 

Related posts

வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது

admin

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!

admin

இறுதி தேர்தல் – ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகூடிய வாக்குப்பதிவு!

admin

Leave a Comment