இலங்கை விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து : ஜப்பானை வீழ்த்திய கோஸ்டாரிகா அபார வெற்றி..!

கால்பந்து உலக கோப்பை தொடர் –

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

ஜப்பானை வீழ்த்திய கோஸ்டாரிகா அபார வெற்றி

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா வீழ்த்தி அபார வெற்றி அடைந்துள்ளது. 

ஜப்பானை, கோஸ்டாரிகா ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புல்லர் 81 நிமிடங்களில் வெற்றி கோலை அடித்து அசத்தி வெற்றியை பதிவு செய்தார். 

ஸ்பெயினுடன் மோதிய முதல் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்திருந்த கோஸ்டாரிகா கம்பேக் கொடுத்திருக்கிறது. 

Related posts

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார் – பிரதமர்

Suki

நாடாளுமன்ற அமர்விற்காக ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட மாட்டார் – சபாநாயகர்

admin

வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!

Suki

Leave a Comment