இந்தியா இலங்கை சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனின் திருமணம்

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனின் திருமணம் சொந்த பந்தங்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக், கடல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ரங்கூன், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்தார், தேவராட்டம் படத்தின் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் கௌதம் கார்த்திக்.

இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் கௌதம், இரு நாட்கள் கழித்து மஞ்சிமாவும் ஓகே சொல்ல, தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இன்று (நவம்பர் 28ம் தேதி) திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய சொந்த பந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடந்த நிலையில் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்

Suki

மங்கள சமரவீரவின் அரசியல் — ஒரு அஞ்சலிக்குறிப்பு

Suki

இணுவில் காரைக்காலில் நாகபாம்பு- மீளவும் பிடிக்கப்பட்டது

Suki

Leave a Comment