இலங்கை

பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?

சந்தையில் மீண்டும் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சுங்கத் திணைக்களத்தின் அலட்சிய போக்கே காரணமெனவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் இதற்கான இறக்குமதி 50 சதவீதத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மறுபுறத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை விடுவிக்காமல் சுங்கத் திணைக்களத்தினரும், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகார சபையினரும் அலட்சிய போக்கினை கடைப்பிடிக்கின்றனர்.

இதனால் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட பால்மா காலாவதியானதன் பின்னர் கால்நடைகளுக்கான தீவனமாகவே வழங்கப்படுகின்றது.

எனவே சுங்கப்பிரிவினரின் அலட்சியப்போக்கினால் நாட்டு பிள்ளைகளுக்கு பால்மா கிடைக்காமல் போவதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ; ஹிஷாலினி விவகாரம் – ரிஷாத் பிணையில் விடுதலை

Suki

நிதி நெருக்கடி: பசிலின் திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்த அமைச்சரவை தீர்மானம்

Suki

அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாலேயே பைஸர் தடுப்பூசி வழங்குவதை நிறுத்தினோம்..!

Suki

Leave a Comment