இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

கீர்த்தி சுரேசுக்கு கலியாணம் – நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிககைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு செய்துள்ளார். 

அவருடைய நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய இரு திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.

இந்த 4 படங்களை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்தையும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், இதற்கு காரணம் என்னவென்றால் விரைவில் நடிப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

அதுமட்டுமின்றி அவருடைய தாய், தந்தை கீர்த்தி சுரே{க்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து விட்டார்களாம். இதனால் தான் நடிப்பை விட்டு விலக கீர்த்தி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தியை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவல் இதுவரை வெளிவரவில்லை. நடிப்பில் இருந்து விலகினாலும், தயாரிப்பில் களமிறங்கி நல்ல படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி.

Related posts

இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதற்கு இலங்கை முயற்சி

Suki

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம்

Suki

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Suki

Leave a Comment