இலங்கை பிரதான செய்திகள்

9 பாடங்களிலும் ஏ சித்தியடைந்த மாணவன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்கள்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியடைந்த மாணவன் தனது தந்தையாருடன் பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களினால் தீவைத்துக் கொழுத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். 

கண்டி – அம்பிட்டிய பல்லேகமவில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது தனது மகன் மீது சிலர் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்கள் எனவும் இருப்பினும் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

திடீரென ஒற்றுமையாகிய தமிழ்க் கட்சிகள் – சனிக்கிழமை முடிவு தெரியும்

Editor2

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு

Suki

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு!

Suki

Leave a Comment