இலங்கை யாழ்ப்பாணம்

யாழ்.நகரில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 12 வர்த்தகர்கள் சிக்கினர்!

யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய திடீர் சோதனையின்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம் காலாவதியான பொருட்களை அழிக்க உத்தரவிட்டுள்ளது. 

யாழ்.நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை ஒரு கடையும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர்.

இதனையடுத்து உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14.11.2022ம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர். இன்றையதினம் 30.11.2022 ம் திகதி அவ்வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை மொத்தமாக 305,000/= தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

Related posts

30 STF அதிகாரிகளுக்கு கொரோனா

admin

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது-வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வி?

Suki

இலங்கையை இனவாத நாடாகவே அடையாளப்படுத்த முடியும்- கஜேந்திரகுமார்

admin

Leave a Comment