இலங்கை உலகம்

ஓமானில் 27 வயதான அக்கரைப்பற்று யுவதி இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகம்!

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் நடத்தப்படும்  பாதுகாப்பு இல்லத்தில் இருந்த மேலும் 18 இலங்கைப் பெண்கள் ஆட் கடத்தலில் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி மனிதக் கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் குழுவும் இலங்கையின் பாதுகாப்பு இல்லத்தில்  வாக்குமூலம் பெறுவதற்காக ஓமன் சென்றிருந்தனர். 

கடந்த 18ஆம் திகதி வரை தங்கியிருந்த அதிகாரிகள் குழு சுமார் 41 பெண்களிடம் வாக்குமூலங்கள்  பெற்றுள்ளதுடன் அவர்களில் 18 பேர் ஆட்கடத்தலில் சிக்கியுள்ளனர்.

குறித்த 18 பெண்களில் ஒருவரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த 27 வயதுடைய  யுவதி, துபாயிலிருந்து வந்த  20 வயதுடைய இளைஞர் ஒருவர்  தன்னை பாலியல் வன்கொடுமை புரிந்தார் என  தெரிவித்துள்ளார். 

தெமட்டகொடையில் வசிக்கும் மேலும் இரு யுவதிகள்  இலங்கையர்கள் இருவரால் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு    அவர்களை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்து  துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம்!

Suki

ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்!

Suki

துப்பாக்கி, கைக்குண்டு,போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது.

Suki

Leave a Comment