இலங்கை உலகம்

ரோகிங்யா அகதிகளை காப்பாற்றியமைக்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்தார் ஐநா அறிக்கையாளர்

100க்கும் மேற்பட்ட ரோகிங்யா அகதிகளுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகை காப்பாற்றியமைக்காக மியன்மாருக்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொம் அன்ரூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னாசியா மற்றும் தென்கிழக்காசிய அரசாங்கங்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் அந்தமான் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற ரோகிங்யா அகதிகளை மீட்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும்  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் ரோகிங்யாக்கள் அதிகளவு ஆபத்தான கடல் மற்றும் தரை போக்குவரத்து பாதைகளை பயன்படுத்துகின்றனர் பிராந்தியத்தில் உள்ள மியன்மார் ரோகிங்யா அகதிகள் அனுபவிக்கும் துயரமான நம்பிக்கையற்ற நிலையை வெளிப்படுத்துகின்றது.

விபரங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்ற போதிலும்,100க்கும் அதிகமானவர்களுடன் இரண்டு படகுகள் ஆபத்தான பயணத்தினை மேற்கொண்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தத்தளித்துக்கொண்டிருந்த மூன்றாவது படகை104 ரோகிங்யாக்களுடன்  இலங்கை கடற்படை காப்பாற்றியுள்ளது. இந்த படகில் பல சிறுவர்கள் உறவுகள் யாருமற்ற விதத்தில் உள்ளனர்,ரோகிங்யா அகதிகளை காப்பாற்றியமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் முழு மனதுடன்  நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என டொம் அன்ரூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

100 ரோகிங்யாஅகதிகளுடன்  படகொன்று கடலில் தத்தளித்தது,குறிப்பிட்ட படகு இந்தோனேசியா அசேக்கு அருகில் காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது குறிப்பிட்ட படகின் இயந்திரம் பழுதடைந்துவிட்டது படகில் உள்ளவர்கள் உணவு நீர் இன்றி அவதியுறுகின்றனர்- குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கடல்சார் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக செயற்பாடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் இந்த படகை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என டொம் அன்ரூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர் அவர்களை பாதுகாப்பாக தரையிறக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர்

Suki

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சஹ்ரான் சந்திக்கவில்லை – சரத் வீரசேகர

Suki

நாட்காட்டி அச்சிடும் பணிகள் 90 வீதத்தால் வீழ்ச்சி

Suki

Leave a Comment