நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.
நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. இவரது காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன.
சினிமாவில் இவர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும், மீம்ஸ்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு. “எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க..
எனக்கு எண்டே கிடையாது டா” என தலைநகரம் படத்தில் அவர் பேசும் வசனம் நிஜ வாழ்விலும் அவருக்கு கச்சிதமாக பொறுந்தும்.
சினிமாவில் அவர் நடிக்ககூடாது என ரெட் கார்டு போட்ட போதிலும், அதிலிருந்து மீண்டு வந்து தடைகளை தகர்த்து தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார் வடிவேலு.
தற்போது இவர் நடிப்பில் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் வடிவேலு. அதேபோல் சந்திரமுகி 2-வில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.