அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தில் இருந்து மிக முக்கிய தகவல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களை தொடர்ந்து, அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ள இந்தப் படம், ஜனவரி மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்திற்காக, அஜித்தின் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்கும் நிலையில், நாளை இந்த படத்தில் இருந்து முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.