இந்தியா இலங்கை சினிமா

‘தசாவதாரம்’ கமல்ஹாசனை மிஞ்சிய சூர்யா..! 42-வது படத்தில் 13 கெட்டப்பில் நடிக்கிறாரா?

நடிகர் சூர்யா தன்னுடைய 42-வது படத்தில், 13 வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அவருடைய ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
 

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. தொடர்ந்து கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டுமின்றி… தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதற்கு காரணம் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றும், பாலா நடிகையோடு நெருக்கமாக இருந்தது மட்டுமின்றி, சுமார் 10 கோடி அளவிற்கு சூர்யாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும், சூர்யா தரப்பில் இருந்து வெளியாகவில்லை

தற்போது சூர்யா, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் 3d தொழில்நுட்பத்தில் வரலாற்று கதையம்சம் கொண்ட கதையாக தயாராகி வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சூர்யா இந்த படத்தில் மொத்தம் 13 கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.  ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில், கமல் பத்து வேடங்களிலும், சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் 6 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில், அவர்களை மிஞ்சும் வகையில் சூர்யா 13 கெட்டப்பில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், வைரலாகி வருகிறது.

Related posts

விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி

Suki

யாழில் நேருக்கு நேராக மோதிய முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும்!

Suki

பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!

Suki

Leave a Comment