உலகம் விளையாட்டு

கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர்

பிரபல கால்பந்து ஜாம்பவான் பிரேசிலை சேர்ந்த பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்று அழைக்கப்படும் பீலே உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார்.

கிரிக்கெட்டுக்கு பிராட்மேன், சச்சின் எப்படியோ, அதே போல் கால்பந்து உலகிற்கு பீலே விளங்கினார். தனது அபாரமான ஆட்டத்தால் எதிரணி ரசிகர்களை கூட கவர்ந்த பீலே தற்போது கால்பந்து ரசிகர்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி சென்று விட்டார்.

பிரேசில் அணிக்காக 95 போட்டியில் விளையாடியுள்ள பீலே 77 கோல்களை அடித்திருக்கிறார்.

16 வயதில் வாய்ப்பு

பிரேசிலில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். பீலே தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட தொடங்கினார். சிறுவயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16 வது வயதில் இடம் பெற்றார்.

தொடர்ந்து 2 உலககோப்பை

இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் 1958 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார். இதனை அடுத்து 1962 ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார்.இதனை அடுத்து இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது.

ஒரே வீரர்

ஒரே வீரர்

பிறகு 1970 ஆம் உலக கோப்பையில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது. இந்த சாதனை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

கால்பந்து கிங் என்று அறியப்பட்ட பீலே இதுவரை 1279 கோல்களை தனது கால்பந்து வாழ்க்கையில் அடித்திருக்கிறார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார்.

Related posts

இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீன தீவிரவாத குழு தலைவர் உயிரிழப்பு

admin

பிரான்ஸில் துப்பாக்கி பிரயோகம் – ஆறு பேர் காயம்!

admin

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்

Suki

Leave a Comment