இந்தியா சினிமா

விஜய்யின் வாரிசு பட பிரபலம் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக், அதிர்ச்சியில் படக்குழு

நடிகர் விஜய்யின் 66வது படம் வாரிசு, இப்படம் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராக தில் ராஜு அவர்கள் தயாரித்துள்ளார். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடிவில் ரூ. 80 கோடி வரை எட்டியுள்ளது.

ஹைதராபாத்தில் பாதி படம் எடுக்கப்பட்டுள்ளது, இதில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சம்யுக்தா என பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

வரும் பொங்கல் ஸ்பெஷலாக படம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

11ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களை தாண்டி படக்குழுவும் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் தான் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது, அதாவது இப்படத்தில் Production Designer சுனில் பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம்.

Related posts

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மத்திய அரசின் நோக்கம் – ராம்நாத் கோவிந்த்

admin

விவசாய நிலங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது கவலையளிக்கிறது – வைகோ

admin

விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி

Suki

Leave a Comment