இலங்கை

தமிழ் கட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்த ரணில் – ஒரே நாளில் பேச்சு வார்த்தை தோல்வி

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை ஒரு நாளிலேயே முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், மேலும் ஒருவார அவகாசத்தை ஜனாதிபதி தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இல்லையேல், 2040 ம் ஆண்டு வரை இந்தப்பிரச்சினை நீண்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லிணக்க செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.எனினும் ஒரு நாளிலேயே முக்கிய பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளில் என்டிஜன் பரிசோதனை

admin

இராணுவத்தின் வாகனம் பாரிய விபத்து, பலர் படுகாயம்

Suki

மஹியாவ பகுதி தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை

admin

Leave a Comment