Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

தேர்தல் வேண்டாம் – விக்கி எம்.பி பல்டி

நாட்டினுடைய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால் தேர்தலினை நிறுத்துவது சரி என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் இடம்பெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் பரவியிருக்கின்றது இது தொடர்பில் உங்கள் கருத்து யாது என எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை நிறுத்துவது சரி என்பது என்னுடைய கருத்து. இந்த தேர்தல் தேவையற்றது. நாட்டினுடைய பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது.

இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே ஒவ்வொருவருக்கிடையில் முரண்பாடுகளும், தமது பதவிகளிற்காக பிரிந்துகொண்டு போகின்ற தன்மையும் இந்த நாட்டிலே தற்பொழுது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும்.

அதை காட்டிலும் எத்தனையோ மில்லியன் தேவையாக இருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்கெட்ட நிலைமையில் பணத்தை இதில் கொட்ட வேண்டிய அவசியமில்லை.

மாகாண சபை தேர்தலை நடத்தினால் பரவாயில்லை, ஏனெனில் மாகாணசபை என்று கூறும் போது

வடகிழக்கு மாகாணங்களுக்கு கிட்டதட்ட நான்கு வருட காலங்களாக எந்த வித செயற்பாடுகளும் இல்லாமல் இருப்பதால் அது அவர்களிற்கு நல்லது.

இவ்வாறான ஒரு தேர்தல் இப்பொழுது நடைபெற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. சில வேளைகளில் அது நிறுத்தப்படக்கூடும். ஆனாலும் நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் எமது கடமைகளை செய்துகொண்டிருக்கின்றோம். எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவினால் மட்டக்களப்பில் இருவர் உயிரிழப்பு!

admin

மன்னாரில் 25 ஆண்டு பயிர்ச் செய்கையாளர்களுக்கான காணி வழங்க நடவடிக்கை!

Suki

இலங்கையில் கொள்ளையடித்து படகு மூலம் தமிழம் தப்பியோடிய கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி!

Suki

Leave a Comment