Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

தமிழ்க் கட்சிகளை சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இன்றையதினம் ஒன்றாக சந்திக்கவுள்ளார்.

தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகளை அவர் ஒருமித்துச் சந்திப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தமிழரசுக்கட்சியின் சார்பில் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மற்றும்
சுரேஷ்பிரேமச்சந்திரன் , ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமாரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரனும் பங்குபற்றவுள்ளனர். 

இந்தச் சந்திப்பு முற்பகலளவில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் , விக்னேஸ்வரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் தரப்புக்களும், இறுதியாக தமிழரசுக்கட்சியும் வெளியேறி விட்ட நிலையில் முதற்தடவையாக இந்தியா அனைத்து தலைவர்களையும் ஒருமித்து அழைப்பது இதுவே முதற்தடவையாகும்

அத்துடன், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ரெலோ,புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.ஜனநாயகப்போராளிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன ஒருங்கிணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

இலங்கையில் அதிக அபாயமிக்க பகுதிகளின் தகவல்கள் வெளியீடு

admin

சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

Suki

கேஸ் விநியோகம் நாளையும் இடம்பெறாது!

Suki

Leave a Comment