நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளமை காரணமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைதியான முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வழிவகுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.