Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் முட்டைக்கு நேர்ந்த கொடுமை

முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் தலைவர், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதிகார சபையின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முட்டை இறக்குமதிக்கு முன்னிலையான நிறுவனம், 32 ரூபா 5 சதத்திற்கு, அதனை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.

எனினும், பறவைக் காய்ச்சல் காரணமாக, முட்டை இறக்குமதிக்கு இடமளிக்க முடியாதென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோப் குழுவின் கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிட தக்கது.

Related posts

வீடு ஒன்று தீக்கிரை…! பொருட்கள் எரிந்து நாசம்!

Suki

தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி பலி!

Suki

அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்

Suki

Leave a Comment