Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் 7 உயிர்களை பறித்த கொடூர பஸ் விபத்து – சோகத்தில் மக்கள்

நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்றும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்றும் கூறப்படுகின்றது

Related posts

உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!

Suki

#இன்றைய #பத்திரிகை கண்ணோட்டம் | 13.06.2019

admin

மேலும் 286 பேருக்கு கொரோனா இன்று தற்போதுவரை 648பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Frank Vithusan

Leave a Comment