Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

மூன்று நாட்களுக்கு மக்களே அவதானம்

நாட்டில் அடுத்த 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

பேருந்தில் ஏற முயற்சித்த பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார்!

Suki

மற்றுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிப்பு.

Suki

உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

admin

Leave a Comment