வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வானது மல்லாகம் – நரியிட்டான், இளைய நிலா சனசமூக நிலையத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது பாரம்பரிய விளையாட்டுக்களான கிறிஸ் மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், தேங்காய் துருவுதல், முட்டி உடைத்தல், இடியாப்ப தட்டு பின்னுதல், கயிறு இழுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

சனசமூக நிலையத்தின் தலைவர் பொ.வசந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவத்திரு வேலன் சுவாமிகள், சிவசிறி வை.ஜீவநாத குருக்கள், வெண்கரம் அமைப்பின் புலம்பெயர் செயற்பாட்டாளர் கந்தசாமி பரிமேலழகன், டான் டிவி முகாமையாளர் இளையதம்பி செல்வச்சந்திரன், வெண்கரம் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களான முருகையா கோமகன், ந.பொன்ராசா ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டதுடன், சமூக மட்ட அமைப்பினர், இளைஞர்கள், யுவதிகள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
