கொழும்பு – விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.