Uncategorized

சாரதி அனுமதிப்பத்திரம் இனி தேவையில்லை; அடுத்து வரவிருக்கும் புதிய நடைமுறை

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும் அது கையடக்க தொலைபேசிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திர உள்ளீடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அச்சிடுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் அது தீர்க்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related posts

ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஏற்றுமதி!

admin

சமையல் எரிவாயு சிலிண்டரை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை

admin

மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

Suki

Leave a Comment