Uncategorized

உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கைப் பல்கலைக்கழகம்!

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

இந்த ஆண்டு பல்கலைக்கழகம் அதன் முந்தைய உலக தரவரிசை நிலை 1531 இலிருந்து 1468 இற்கு முன்னேறியுள்ளதாக UOC அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் இணைய உள்ளடக்கம், சுயவிவரங்களில் உள்ள மேற்கோள்கள் என்பன இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக வழிவகுத்துள்ளது. 

Related posts

பகிடிவதை தாங்கமுடியாமல் கடிதம் எழுதிவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்..!

admin

விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும்! கடும் கோபத்துடன் திட்டிய மைத்திரி

admin

இரும்புக்கம்பி தொழிற்சாலையிலிருந்து அதிர்ச்சி தரும் பொருட்கள் மீட்பு – இருவர் கைது!

admin

Leave a Comment