இலங்கை சினிமா

இலங்கைத் திரைப்படம் “மணல்” சர்வதேச விருது

கடந்த 3 ஆம் திகதி நெதர்லாந்து ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை தமிழ் முழுநீளத் திரைப்படமான ‘மணல்’ விஷேட ஜூரி விருதினை பெற்றுள்ளது.

விசாகேச சந்திரசேகரம் எழுதி, இயக்கி தயாரித்த இத்திரைப்படம் ‘ ஒரு முன்னாள் தமிழ் போராளி இராணுவ காவலில் இருந்து வெளியாகி, போரின் போது காணாமல் போன தனது காதலியை தேடும்’ கதையாக இருக்கிறது.

ஏற்கனவே விசாகேச சந்திரசேகரத்தின் ‘Frangipani’ மற்றும் ‘Paangshu’ ஆகிய இவருடைய திரைப்படங்கள் பல உள்நாட்டு சர்வதேச விருதுகளை பெற்றிருந்தது.

இத்திரைப்படம் ‘புரட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில் சிக்குண்ட ஒரு இளைஞனைப் பற்றிய எளிய கதை’ என்று விருதினை அளிக்கும் போது நடுவர் குழு குறிப்பிட்டிருந்தது

Related posts

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

Suki

பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்

admin

வடக்கில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

Suki

Leave a Comment