நியூசிலாந்தில் இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்ரியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்த நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.