பகலவன் TV பகலவன் செய்திகள் விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து அணி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலைப்பெற்ற இங்கிலாந்து அணி, தொடரையும் வென்றுள்ளது.

இதேவேளை கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில், பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரை வென்றது.

மிர்புரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 327 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 44.4 ஓவர்கள் நிறைவில் 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இங்கிலாந்து அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 124 பந்துகளில் ஒரு சிக்ஸர் 18 பவுண்ரிகள் அடங்களாக 132 ஓட்டங்ளை பெற்றுக்கொண்ட ஜேஸன் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts

சுப்பர் கிங்ஸின் அபார வெற்றி – மண்டியிட்ட ராஜஸ்தான்

admin

கொழும்பில் பதற்றம் – பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு

Editor2

மாகாண சபை , உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமும் இன்றி விரைவாக நடத்தவும் – சஜித் பிரேமதாச

Suki

Leave a Comment