சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் புதிய அறிவிப்பு!

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடுதலை இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

விடுதலை அறிவிப்பு இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற மார்ச் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

போரை நிறுத்துங்கள் புதின் : கவிஞர் வைரமுத்து.

Suki

ஈழத்து நடிகை பூர்விகா என்ன சொல்றா

Suki

மீண்டும் அஜித்துடன் இணையும் அனிகா

admin

Leave a Comment