Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

தேர்தலுக்கு ரணில் பச்சைக்கொடி – ஆனால்…?

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மற்றொரு ஜூலை 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அக்கரைப்பற்று சந்தை ஊடாக 300 தாண்டிய கொரோனா

admin

யாழில் முப்படைகளின் தேவைக்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் 

Suki

A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்

Suki

Leave a Comment