தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொடவில் இன்று பிற்பகல் மோதியதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.