யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் காரணமாக 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.அத்துடன் 15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்க்கு உதவு மாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர்.
குறித்த பட்டியில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு, இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான் எஸ்.சுகிர்தன் சிகிச்சையளித்து வருகின்றார்.