Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

ஆட்டு இறைச்சியால் 2 பிள்ளைகளின் அம்மாவுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதால் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 46 வயதுடைய லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் “கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது.

மறுநாள் யாழ்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அதற்கு அனுமதிக்காத குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கமரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு, குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

Related posts

பொதுஜன பெரமுன தொகுதி அமைப்பாளர்களின் 2ஆம் கட்ட செயலமர்வுகள் இன்று!

admin

இரண்டு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை

Suki

காணிப் பிரச்சனையில் மாணவர்கள் மீது தாக்குதல் – யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை – வீடியோ

admin

Leave a Comment