இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறைக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.