Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

15 வருடங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி

15ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார் . இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை
பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது.

எனினும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நீதி நிருவாகச் செயற்பாடுகள் காலதாமதம் ஆனதால், தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினம் விடுதலை செய்யப்ட்டுள்ளார்.

Related posts

பசு வதை தடையால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல – இம்ரான் மஹ்ரூப்

Suki

அம்பாறையில் ஆடை விற்பனை நிலையம் தீக்கிரை

Editor2

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்.

Suki

Leave a Comment