இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

காரைநகரில் ஆட்களற்ற வீட்டில் கொள்ளை : சிக்கியது திருட்டுக் கும்பல்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில், வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , நிலைகள் என்பவற்றை திருடிய கும்பல் ஒன்றினை ஊரவர்கள் மடக்கி பிடித்து நயப்புடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று காரைநகர் கோவளம் பகுதியில் ஆட்கள் அற்ற வீடுகளுக்குள் புகுந்து வீட்டின் கதவுகள் , யன்னல்கள் அவற்றின் நிலைகள் இவற்றை உடைத்து திருடி செல்ல முற்பட்டுள்ளனர்.

அதனை கண்ணுற்ற ஊரவர்கள் ஒன்று கூடி திருட்டு கும்பலை மடக்கி பிடித்து நயப்புடைத்த பின்னர் , ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது பட்டா ரக வாகனத்தையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனை அடுத்து ஐவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகர் பகுதியை சேர்ந்த பலர் , யாழ்.நகர் பகுதி, கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் குடியேறி உள்ளமையால் , காரைநகரில் உள்ள அவர்களது பூர்வீக வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் உள்ளமையால் , திருடர்கள் அந்த வீடுகளில் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்

Related posts

மாப்பாணரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நாட்டப்பட்டன

Suki

இலங்கையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அனுமதி

Suki

ஒரே நாளில் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Frank Vithusan

Leave a Comment