இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து முட்டை நாளை இலங்கைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த முட்டைகளை பேக்கரி தொழிற்சாலைகளுக்கு 40 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அதிகளவு பஸ்கள் இன்றைய தினம் சேவையில் – இலங்கை போக்குவரத்து சபை

Suki

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை!

Suki

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம்

Suki

Leave a Comment