Headline Headlines News இலங்கை உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

அதிக வெப்பநிலை நிலவக்கூடும்!

வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று(திங்கட்கிழமை) அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வேலை செய்யும் இடங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதும், பொதுமக்கள் முடியுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பதும் சிறந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியவர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ந்தும், வீட்டிலேயே இருக்குமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பார்க் & ரைட், மின் டிக்கெட் முறை ஜனவரி 1 முதல் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

admin

யாழில் சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

admin

வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்!

Suki

Leave a Comment