Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் பாடசாலை மாணவிகள் தேசியத்தில் சாதனை

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகியுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென். பிரிட்ஜெட்ஸ் கான்வென்ட் அணியினை முதல் கால் பாதியில் 4:4 ரீதியிலும், இரண்டாவது கால்பாதியில் 8:8 ரீதியிலும், மூன்றாவது கால்பாதியில்16:10 ரீதியிலும், நான்காவது கால் பாதியில் 26:14 ரீதியிலும் கைப்பற்றி யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இச் சம்பியன் பட்டம் மூலம் இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது பிரிவு போட்டியில் வடமாகாண பாடசாலை ஒன்று பெற்ற முதலாவது சம்பியன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜெபோஷினி கைசிங் ரவீந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் சிறந்த தற்காப்பு வீராங்கனையாக விஜயரூபன் சகானா தெரிவானார்.

யாழ் திருக்குடும்ப கன்னியர் மட கூடைப்பந்தாட்ட அணிக்கு தனுஸ்காந்த் ராஜசோபனா பயிற்றுவிப்பாளரராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்தை கொண்டு வருவோம் – சஜித்

Suki

இலங்கையில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை கடந்தது

admin

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்!

Suki

Leave a Comment