Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிசாருக்கு அதிகாரம் இல்லை
என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ம் திகதி வழக்கு விசாரணையின்போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Related posts

சொந்த நாட்டில் தொழில்சார் அங்கீகாரம் இன்மையே இன்று பியூஸின் மரணத்திற்கு காரணம்

Suki

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

admin

நீங்களும் வாழ்த்தலாம் – 24.06.2019

admin

Leave a Comment