Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் மன்னார்

மன்னாரில் மாணவிகள் கடத்தல் – வெளியான முக்கிய அறிவிப்பு

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

தலை மன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண்டும் நேற்று (18) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் அழைக்கப்பட்டு சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம் பெற்றது.

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில் இச் சிறுமிகள் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

Related posts

நெல்லியடி மாலைச்சந்தை சந்தியில் இராணுவ வாகனமும் மோட்டார் வாகனமும் விபத்து.

Suki

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய்

Suki

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும் – ஜீவன் தொண்டமான்

Suki

Leave a Comment